ரயில் சாரதி உதவியாளர் பற்றாக்குறையால், கடந்த 3 நாட்களில் மட்டும் 30 ரயில் சேவைகள் உட்பட, 123 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 28ஆம் திகதி 27 ரயில் சேவைகள், 9 எரிபொருள் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 36 சேவைகளும், 29ஆம் திகதி 29 பயணிகள் ரயில்களும், 15 எரிபொருள் மற்றும் சரக்கு ரயில்களுமாக, 44 ரயில் சேவைகளும், நேற்று (30) 36 மற்றும் 12 எரிபொருள் மற்றும் சரக்கு ரயில்களுமாக 43 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு காரணங்களுக்காகவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் 30 ரயில் சேவைகளை இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது