மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிஓயா பிரதேசத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இரு இளைஞர்களை கொன்று புதைத்த சம்பவத்தில் மாவனல்லை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வியாபாரி என கருதப்படும் நபர் ஒருவரையும் அவரது மூன்று கையாளர்களையும் கைது செய்ய கேகாலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் கையாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இணைப்புச் செய்தி: