20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக
இஸ்ரேல் இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹெட்சன்ரொக் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் அலன்கால் தெரிவித்துள்ளார்.20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் இ-மெயில் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டிலேயே இது நடந்து இருக்கலாம் என நினைக்கிறேன். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு இது நடந்துள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஹெக்கர்களின் இருப்பிடம் குறித்தோ இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தோம் எந்த தகவலும் இல்லை.
இதனை விசாரிக்கவும், சரி செய்யவும் ட்விட்டர் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து எந்த தெளிவான விளக்கங்களும் இல்லை. எனத் தெரிவித்தார்.
ஹெக்கர்கள் மூலம் பலரது அந்தரங்க தகவல்களும் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.