பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பஸ் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாரதி உட்பட எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென்றும் அவர்கள் அனைவரும் மடுல்கலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பன்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.