2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஹிரு தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டி, 2030ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.