ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயற்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பி.ப 4:00 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.ஏ ஹரிஸ், பைஷல் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா. எம்.ஐ மன்சூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நிசாம் காரியப்பர். முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை, பிரதேச உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கே எ ஹமீட்