191 இணையத்தளங்களை மூடுமாறு பங்களதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் மேற்படி இணைய தளங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை முடக்குமாறு அந்நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டது என தகவல்துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களை ஒடுக்குவற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் நீண்டகாலமாக கவலை வெளியிட்டு வந்தன.
பங்களாதேஷின் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.