காலி வட்டரக பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெகுனுகொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனைத் தடுக்க சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தலையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்போதே சந்தேக நபரான இளைஞர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி அவரது கடமைக்கு இடையூறு எற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் சிறுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.