உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹெட்ஜ்நிதிகளும் ஏனைய முதலீட்டாளர்களும் தங்களுடைய கடும் நிலைப்பாட்டின் காரணமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கான முக்கிய உதவியை தடுத்துவைத்துள்ளனர் என உலகின் 182 பொருளாதார நிபுணர்களும் அபிவிருத்தி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
கடன் நிவாரணம் குறித்த தங்களின் கடும் நிலைப்பாடு காரணமாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹெட்ஜ்நிதிகளும் ஏனைய முதலீட்டாளர்களும் இலங்கைக்கான முக்கிய உதவி கிடைப்பதை தடுத்துள்ளனர் என என உலகின் 182 பொருளாதார நிபுணர்களும் அபிவிருத்தி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
கார்டியனிற்கு வழங்கியுள்ள அறிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார மீட்சி பெறுவதற்கு விரிவான கடன் இரத்து அவசியம் என தெரிவித்துள்ள அவர்கள் சர்வதேச அளவில் உருவாகிவரும் கடன் நெருக்கடியை கையாள்வதற்கு சர்வதேச சமூகம் தயாரா என்பதற்கு இலங்கை ஒரு பரிசோதனை களமாக காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு மிகமுக்கியமான நிதி கிடைப்பதை முதலீட்டு நிறுவனங்கள் போன்ற தனியார் துறை கடன்வழங்குநர்களும் ஹெட்ஜ் நிதிகளும் தடுத்துள்ளனர் எனவும் உலகின் 182 பொருளாதார நிபுணர்களும் அபிவிருத்தி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடன்பேச்சுவார்த்தைகள் தற்போது மிக முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன, என அறிக்கையில் தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு பல்தரப்பு தனியார் கடன்வழங்குநர்கள் அனைவரும் கடன் மறுசீரமைப்பின் சுமையை சுமக்கவேண்டும் குறுகிய காலத்தில் மேலதிக நிதி கிடைக்கவேண்டும் என்ற உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.