இன்று ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதன்படி, பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், மண்டல மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்ய மொத்தம் 1,625 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சை நிலையங்களில் உன்னிப்பாக அவதானம் செலுத்துமாறும், அப்பகுதிகளில் தொடர்ந்தும் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.