ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஏறாவூர் பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த வீட்டில் பிரசவித்த குழந்தையை கண்டுபிடித்தனர்.
எனினும் குழந்தை உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரசவத்தின் பின்னர் குழந்தை கொல்லப்பட்டதா அல்லது ஏதேனும் காரணத்தினால் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததா என்பதை அறிய குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஆவார்.
வீட்டுக்குள் டெங்கு நுளம்புகள் இருக்கிறதா எனச் சோதனையிட வந்த சுகாதாரக் குழுவில் இருந்த நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.