மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.