ஓமானில் உள்ள இலங்கையின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 14 பேர் இன்று (ஜன 20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களில் 8 பேர் தாங்கள் பணிபுரிந்த வீடுகளில் சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தொழிலாளர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்ட பெண்களாவர்.
இன்று நாடு திரும்பியவர்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.