அரசுக்கு எதிராக போராட்டத்தில் அங்கம் வகித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க கோரி 12,000 கையெழுத்திடப்பட்ட கடிதங்கள் இன்று காலை சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டன.
மனசாட்சியின் பிரகடனம் என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. அவரை விடுவிக்க வேண்டும் என இதனூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.