(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பயிற்சி நிலையங்களுக்காக 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்த 22 மோட்டார் சைக்கிள்கள் 12 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இன்னும் வாகனத் தரிப்பிடங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் பயிற்சி உத்தியோகத்தர்களின் கடமைகளுக்காக 2012 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இதுவரை அவை உரிய அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும், அதனால் அதற்காக செலவிடப்பட்ட நிதியால் எந்தவித பயனும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த 22 மோட்டார் சைக்கிள்களும் துருப்பிடிக்கும் நிலையில் உள்ளதாகவும், டிசம்பர் 31, 2021 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடத்திய கணக்காய்வு அறிக்கையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.