யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தையை தாய் மாமன் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால், குழந்தையின் தாய் குழந்தையை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
வைத்திய பரிசோதனையின் போது, குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாய் மாமனே குழந்தையை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.