பாறுக் ஷிஹான்
ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன் நான் என தன்னை உதாரணம் காட்டி - மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி முஷாரப் எம்பி உரையாற்றினார்
இ் - பெஸ்ட்(E -best) கல்வி நிறுவனத்தின் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி.எம்.எம்.ஜவ்பர் தலைமையில் கல்முனையில் இன்று (07) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது
ஒரு புள்ளிவிபரவியல் தகவலின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றவர்கள் 4 சதவீதம் என்றால் சிறைச்சாலைக்கு செல்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.இப்பொழுது பெரும் ஆபத்து எம் சமூகத்தில் நிலவி வருகின்றது.அதுமாத்திரமன்றி ஒரு ஊடகவியலாளராக இருந்து அதிகளவான எதிரிகளை சம்பாதித்துள்ளேன்.ஆனால் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து வந்துள்ளேன்.பணம் கொடுத்து வாக்குகளை பெறாமல் மக்கள் பணம் கொடுத்து என்னை அதாவது ஊடகவியலாளனை பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கியுள்ளனர்.எனவே இளைஞர்களினால் சாதிக்க முடியும் என்ற நிலைமை தோன்றியுள்ளது.என்றார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்,கெளரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி, விசேட அதிதிகளாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்,தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில்,கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர், கல்முனை பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தயோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,தென்கிழக்கு பல்கலைக்கழக நிதியியல் விரிவுரையாளர் எம். சிராஜ்,மருதமுறை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ .எம்.நியாஸ்,சட்டத்தரணி அமீன் முஸ்தபா, E BEST கல்வியகத்தின் இரண்டாம் மொழி சிங்கள வளவாளர் ஏ. வீ.ஆரிபீன்,கணனி கணக்கியல் விரிவுரையாளர் எம். ஐ.எம்.பாரிஸ் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் , இ் - பெஸ்ட்(E -BEST)கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகிய பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இ் - பெஸ்ட்(E -best) கல்வி நிறுவனமானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்முனை,ஹற்றன்,பொலன்னறுவையில் பிரதேசங்களில் தற்போது கிளைகள் காணப்படுவதுடன் மேலும் மாணவர்களின் கல்வி வளரச்சியில் பல்வேறு சமூக நல பணியினை மேற்கொண்டு வருவதுடன், 09 ஆவது ஆண்டில் கால்பதித்து விரைவில் 10 தசாப்தத்தை பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.