கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மொனராகலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 06 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு மொனராகலை நீதவான் நேற்று (09) மாலை அனுமதி வழங்கினார்.
புதையல் தோண்டும் குழுவொன்று தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்தினம் (08) ஜீப் வண்டியொன்றை சோதனைக்குட்படுத்திய போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அவரின் சாரதி உள்ளிட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் பசறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.