கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை (10) விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு, டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்து பின்னர் கைதான 24 வயதான கார் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை (10) விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்து குறித்த சந்தேகநபர் நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இரவு விடுதியொன்றிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கொள்ளுப்பிட்டியில் முச்சக்கர வண்டியொன்றின்மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமை குறிப்பிடதக்கது