வெலிகம அர்பா தேசிய பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியை கவனக்குறைவாக கடக்க முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வெலிகம-வலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பாடசாலைக்கு முன்பாக அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இந்த இடத்தில் வெள்ளைக் கோடு அல்லது வேகத்தடையை பயன்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து அருகில் இருந்த CCTV கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.