Our Feeds


Friday, December 2, 2022

ShortNews Admin

VIDEO: சாராயக் கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்க வேண்டும். - டயானா கமகே மீண்டும் கோரிக்கை.



சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் மதுபானக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடைகள், உணவகங்கள் மற்றும் பார்கள் இரவு 10.30 மணிக்குள் மூடப்பட்டால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியாது. எங்களிடம் இரவு பொருளாதாரம் இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகளுக்கு பணம் செலவழிக்க முடியாது என்று டயானா கமகே தெரிவித்துள்ளார்

மேலும், சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்தவுடன் வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் பிற இடங்களை பார்வையிட முன்பதிவு செய்து பணம் செலுத்தும் முறையும் கொண்டு வர வேண்டும் என டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »