ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசன அமைப்பாளர்களாக பதவியேற்க உள்ளனர்.
எதிர்வரும் தேர்தலை இலக்காக கொண்டு தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது ஆசன அமைப்பாளர் பதவிகளுக்கான ஆட்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆசன அமைப்பாளர் பதவிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.