பல கோடி ரூபா பெறுமதியான ‘டொயோடா லான்ட் குரூசர் வி8’ (Toyota Land Cruiser V8) ரக சொகுசு வாகனமொன்று, பொதுபல சேனா அமைப்புக்காக அதன் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்புக்கு நீண்டகாலமாக உதவியளித்துவரும் கலாநிதி வால்டர் ஜயசிங்க என்பவர், இந்த வாகனத்தை வழங்கியுள்ளார்.
வாகனத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) ராஜகிரிய சதர்மராஜிக்க விகாரையில் இடம்பெற்றது. கலாநிதி வால்டர் ஜெயசிங்க, -அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
அண்மைக்காலமாக இந்த வாகனம் தொடர்பில் பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டதாக பொதுபல சேனாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.