மதுபானத்துக்கு கத்தாரில் தடை விதித்ததானது பெண் ரசிகர்கள் தொந்தரவு இல்லாத கால்பந்தை அனுபவிக்க உதவுகிறது என இங்கிலாந்து Times பத்திரிகை புகழாரம் சூடியுள்ளது..!
கத்தாரில் உலகக்கோப்பைக்கான பெண் ஆதரவாளர்கள் தாங்கள் எந்தவிதமான துன்புறுத்தலையும் அனுபவிக்கவில்லை
என்று கூறுகிறார்கள் என இங்கிலாந்தின் முன்னனி பத்திரிகை THE TIMES செய்தி வெளியிட்டுள்ளது !
ஏனைய போட்டிகளில் குடித்து விட்டு
கும்மாளம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு இங்கே இடமில்லாமல் போனதை உலகமே வியந்து பார்க்கிறது ..
-- ஹிஷாம் --
அச்செய்தியின் சுருக்கம் >>
Fifa உலகக் கோப்பை கத்தாரில் நவம்பர் 20 அன்று தொடங்கப் பட்டதிலிருந்து அந்நிகழ்வு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்த முறை உலகக் கோப்பையானது, கால்பந்தாட்ட விளையாட்டுடன் தொடர்புடைய சில மரபுகளை, வழக்கங்களை குறிப்பாக பெண்களை, கவர்ச்சியை குறிவைத்தும் , மதுவுடன் தொடர்புடைய உலகின் விளையாட்டுடன் நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் பலவிதமான பழக்கங்களை மாற்றியமைத்துள்ளது.
இங்கிலாந்தின் முன்னணி நாளிதழான 'தி டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில்,
" இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக தோஹாவிற்கு தங்கள் நாட்டு அணியுடன் வந்த பெண் ரசிகர்கள் குழுவை மேற்கோள் காட்டி, அவர்கள் எவ்வகையிலும் துன்புறுதல், அசெளகரியங்களை எதிர்நோக்கவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார் உலகக் கோப்பை மைதானங்கள் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்று அச்செய்தியில் மேலும் விவரித்துள்ளது.
பிரித்தானிய பெண் எல்லி மொலோசன், (19) விளையாட்டு போட்டிகளின் போது மைதானங்களில் பெண்கள் அனுபவிக்கும் துன்புறுத்தல்கள் தொடர்பில் தனது நாட்டில் ஒரு பரந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
அவர் தனது நாட்டின் தேசிய அணிக்கு ஆதரவளிக்க கத்தாருக்கு வருவதற்கு முன்பு, தோஹாவிற்கு தன்னுடன் வருமாறு தனது தந்தையிடம் கேட்டுக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பிரிட்டிஷ் செய்தித்தாளுக்கு அளித்த அறிக்கையில், "தன் தந்தையை தொந்தரவு செய்யத் தேவையில்லை, ஏனெனில் கத்தாரில் உள்ள உலகக் கோப்பை மைதானங்கள் தனது நாட்டை விட வித்தியாசமாக இருப்பதால், எந்தவிதமான இழிவான கோஷங்களோ பாலின துன்புறுத்தல்களோ இல்லை" என்று ஒப்புக்கொண்டார்.
இங்கிலாந்தை விட கத்தாரின் மைதானங்கள் பெண்களுக்கு மிகவும் பாதுக்காப்பான சூழலை வழங்குவதாக அந்த தகவல் தெளிவு படுத்துகிறது.
மேலும் நாட்டிங்ஹாமைச் சேர்ந்த மொலோசன் தெரிவிக்கையில் "இங்கிலாந்தில் நான் அனுபவித்த எந்த துன்புறுத்தல் போலும் நான் கட்டாரில் பாதிக்கப்படவில்லை," இது ஒரு சிறந்த சூழல் என்று கூறினார்.
"இங்கே வந்தது ஒரு உண்மையான இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று நான் சொல்ல வேண்டும் என மோலோசன் மேலும் கூறினார்.
மொலோசனின் 49 வயதான தந்தையும் தனது மகளை கவனித்துக்கொள்வதற்காக கத்தாருக்கு வந்ததாக விளக்கினார்,
ஆனால் தந்தை வரவே தேவையில்லை என்று அவர் கண்டுபிடித்ததாக ஒப்புக்கொண்டார்.
2010 தென்னாப்பிரிக்கப் உலகக் கோப்பையில் கலந்துகொண்ட 47 வயதான ஆங்கில ரசிகரான ஜோ குளோவர், கத்தாரில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உலகக் கோப்பையின் தனித்துவமான பதிப்பின் மீதான தனது ஆர்வத்தை மறைக்கவில்லை, இங்குள்ள பொதுவான சூழ்நிலையை பதற்றம் குறைந்ததாக விவரித்தார்.
https://www.thetimes.co.uk/article/female-fans-referee-qatar-world-cup-beer-ban-6rd3z7cm7
https://www.thetimes.co.uk/article/female-fans-referee-qatar-world-cup-beer-ban-6rd3z7cm7