ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிற்காக ஒன்றிணைய முடியுமானால் இணைவோம் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (12) தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.