மத்தியஸத சபை ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளூமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாக்கக் கொண்டு நடைபெறுகிறது.
இந்த வகையில் கல்முனை பிரதேச செயலக மத்தியஸத அபிவிருத்தி உத்தியேகத்தர் இம்திஸா ஹஸனினால் கல்முனை கமு/கமு/ அல். பஹ்ரியா தேசிய பாடசாலையில் மத்தியஸ்த ஆளூமை விருத்தி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
குறித்த கருத்தரங்கானது பாடசாலை அதிபரால் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் கா.பொ.த உயர்தர மாணவர்கள் 36 பேர் கலந்து கொண்டனர்.
இங்கு முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்தம், வெற்றி, தோல்வி போன்ற தலைப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.