தெஹிவளை இத்திஹாத் விளையாட்டுக் கழகத்தினால், அகில இலங்கை ரீதியில் உலமாக்களுக்கிடையில் நடாத்தப்பட்ட, UCC CHAMPIONS TROPHY கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் தெஹிவளை இத்திஹாத் அணியினர் மாத்தளை கிறீன் ஸ்டார் அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.