(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ஹுஸைனியா பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் கைவண்ணத்தில் கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கைவினை பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நஸ்ரின் தலைமையில் புதன்கிழமை (30) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை கல்வி வலய முன்பள்ளி பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். ஏ.எம்.ரசீம் கல்முனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.புவிராஜ் மேலும் சிறப்பு அதிதிகளாக கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்தின் உதவி முகாமையாளர் ஐ.எல்.அர்சுதீன் கல்முனை 5,6ஆம் பிரிவுக்கான பொதுச் சுகாதார மருத்துவ மாது டி.கயல்விழி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்
இதன் போது மாணவர்களின் திறமையை வெளிக்காட்டு முகமாக கழிவு பொருட்களின் மூலம் பல கைவினைப் பொருட்கள் மற்றும் மாணவர்களினால் நடப்பட்ட வீட்டுத் தோட்டம் என்பன காட்சிப்படுத்தப்பட்டது.