மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல வீடுகள், வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட செயல்பாடுகளில் பல அசௌகரியங்ளை சந்தித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகள் வடிகால்களை தோண்டி சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூர் நிருபர்