Our Feeds


Wednesday, December 14, 2022

ShortNews Admin

PHOTOS: இலங்கையின் மிக நீளமான பாடசாலை கொடியை சுமந்த மாவனல்லை ஸஹிரா நடைபவணி - வரலாற்று சாதனை!



மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு "ஸஹிரா நடைபவணி" 2022.12.11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .


பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இவ்நடைபவணி பலகாத்திரமான படைப்புக்களுடன் மாவனல்லை நகரை வலம் வந்து பெருமையை உலகுக்கு பறைசாற்றிது எனலாம் .


நாலா பக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரியின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக்கொடி என்ற பெருமையை சுமந்த ஸஹிராவின் 244 மீற்றர் நீளமான பாடசாலை கொடி கல்லூரியின் 83rd batch (2016 A/L) இனால் தயாரிக்கப்பட்டு 150 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »