கொழும்பு, பாத்திமா முஸ்லிம் மகளில் கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் பிரதான எதிர்க்கட்சியான SJB யின் பங்களிப்பில் பஸ் ஒன்று இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ் வரிசையில் இது 41வது பஸ் ஆகும்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபர் ரஹ்மான், SM மரிக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.