காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வவுனியா நகரில் இன்று (டிச.10) முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமை தினமான இன்று வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக 2120 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாலே இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டாம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துடன் தனியாக பேச வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களை தாங்கிய பதாதைக்கு அழுகிய தங்காளி பழங்களை வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுவார்த்தைக்குக்கு செல்லக்கூடாது என தெரிவித்து தமது எதிர்பினை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.