Our Feeds


Sunday, December 18, 2022

ShortNews Admin

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகள் கப்பலான Ocean Odyssey இன்று இலங்கை வருகிறது.



மெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றி பயணிக்கும் Ocean Odyssey கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.  


இந்தியாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு 108 பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் வருகிறது. 

இக்கப்பல் நாளை (டிச. 19) திருகோணமலை துறைமுகத்துக்கு செல்லவுள்ளது.

இதனையடுத்து இந்த 'Ocean Odyssey' கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருணாகல், ஹபரணை, சீகிரிய, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.

இந்தக் கப்பல் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி இரவு 7 மணிக்கு திருகோணமலை துறைமுகத்திலிருந்து தாய்லாந்துக்கு புறப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »