லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற போட்டியில் Galle Gladiators மற்றும் Dambulla Aura அணிகள் மோதின.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் Dambulla Aura அணிக்கு 130 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தது.
இந்த போட்டியில் Dambulla Aura அணி வெற்றி பெற்ற போதிலும் புள்ளிகளிற்கு ஏற்ப இம்முறை LPL கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து Dambulla Aura அணி வெளியேற்றப்பட்டுள்ளது.