ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டிகளை பார்வையாளர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று ஆரம்பமாகவுள்ள சிலோன் ப்ரீமியர் லீக் கிரிக்கட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளை பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் முதலாவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கோன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டியானது பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும், இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது வெளியேறும் சுற்று போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் க்ளேடியேடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதன்படி, கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் C மற்றும் D பெவிலியன் கீழ் பகுதியில் இருந்து பார்வையாளர்களுக்கு போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.