கோல் க்ளேடியேடர்ஸ் மற்றும் கண்டி பெல்கொன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளேடியேடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கோல் க்ளேடியேடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கொன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதற்கமைய, கோல் க்ளேடியேடர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.