துபாயில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமியாவின் சகாக்கள் எனக் சந்தேகிக்கப்படும் நால்வரை கைது செய்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், நான்கு கத்திகள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 16 ஆம் திகதி மற்றும் நேற்றுக் (09) காலையிலும் நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமகி மாவத்தை பகுதியில் இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்க முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் தலைமறைவாக உள்ள சமியாவே இந்த பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.