எதிர்வரும் ஜனவரியில் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் எனவும், ஜனவரி 02ம் திகதி இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.