Our Feeds


Monday, December 5, 2022

ShortNews Admin

குருநாகல் மாவட்டம், கெகுணகொல்லயில் ITEC CAMPUS உதயம்.




கல்விமான்கள் செரிந்து வாழும், அதிகமான கல்விமான்களை உருவாக்கும் குருநாகல் மாவட்டம், கெகுணகொல்ல பிரதேசத்தில் ITEC CAMPUS எனும் கல்வி நிறுவனம் கடந்த 02.12.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர், மற்றும் அதன் நிர்வாகத் தலைவர் M.P.M. Rifkhan ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரியுல்ல கல்வி வலையத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ் பிரிவு) S.L.M பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


குருநாகல் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்ஷேக் ரிஹான் நளீமி, குளியாபிடிய பிரதேச சபையின் உப தவிசாளர் M.C. இர்பான், ஓய்வுபெற்ற அதிபர் சாஜஹான், ஓய்வுபெற்ற ஆசிரியர் S.D. உதுமான், குளியாபிடிய வலய ஆசிரிய ஆலோசகர் மிஹ்ராஜ் சேர், கெகுணகொல்ல பிரதேச கிராம சேவகர் H.P.N. ஹேரத், குரீகொடுவ பள்ளியின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷேக் ஐயூப் மௌலவி, தொரணேகெதர பள்ளி நிர்வாகத் தலைவர் ராபி சேர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


ஊடகத்துறை, கணினிக் கல்வி, ஆங்கிலம் உற்பட பெண்களுக்கான பல கற்கைநெறிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து கற்கை நெறிகளுக்குமான பதிவுகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, மிக நியாயமான விலையில் உங்களுக்கான குறுகிய, நீண்ட கால கற்கைநெறிகளை நீங்கள் இங்கே தொடரலாம். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »