சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான நிதி நிவாரணத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மேலும் தாமதமாகலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதியைப் பெறுவதே அரசாங்கத்தின் முயற்சி என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.