FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் மற்றுமொரு
காலிறுதியில் போர்த்துகல் மற்றும் மொரோக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.இந்த போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.
போட்டியின் 42ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணி வீரர் Y.En.Nesyri அபாரமான கோல் ஒன்றைப் பெற்றுக்கொடுத்து அவ்வணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 52ஆவது நிமிடங்கள் வரை விளையாடும் பதினொருவர் அணிக்குள் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் ஊடாக மொரோக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.