FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கனடா அணிக்கெதிரான போட்டியில் மொரோக்கோ அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் 4ஆவது நிமிடத்திலேயே முதலாவது கோல் ஹகிம் ஸியாச்சினால் பெறப்பட்டது. பின்னர் 23ஆவது நிமிடத்தில் யூசெப்பினால் அபாரமான கோல் ஒன்று பெறப்படவே, போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரரான நயெப்பினால் தவறுதலாக கனடாவுக்கு கோல் ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக நிறைவில் மொரோக்கோ அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் கனடாவை வீழ்த்தியது.
இதனூடாக, குழு “F” இல் இருந்து மொரோக்கோ அணி நொக்கவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டிய சமநிலையில் முடிவடைந்ததன் காரணமாக குரோஷிய அணி 5 புள்ளிகளைப் பெற்று நொக்கவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.