உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 34, 39 மற்றும் 69வது நிமிடங்களில் ஆர்ஜென்டினா அணி, குறித்த ஹெட்ரிக் கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக, நாளை பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி ஆர்ஜென்டினாவுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.