பெந்தோட்டை போதிமால்வ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் பேஸ்புக் வலையமைப்பினர் நடத்திய விருந்துபசாரத்தில் ஐஸ் பேதைப்பொருளுடன் 30 பேர் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோதர, மட்டக்குளி, வத்தளை, நாரஹேன்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.