இன்று இடம்பெற்ற LPL போட்டித் தொடரில் 5 ஆவது போட்டியில் Colombo Stars அணி Dambulla Aura அணியை 9 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Colombo Stars முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.
இதற்கமைய, Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றனர்.
Colombo Stars அணி சார்பில் Niroshan Dickwella 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
Dambulla Aura அணி சார்பில் பந்துவீச்சில் Lahiru Kumara, 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் Tom Abell 33 ஓட்டங்களையும், அணித்தலைவர் Dasun Shanaka ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் Suranga Lakmal, Dominic Drakes மற்றும் Karim Janat ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.