நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்ற ஒருவர் காட்டுப்பகுதியில் சிறுமியை விட்டு விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பன்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி, அம்பன்பொல மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
சிறுமி புலமைப்பரிசில் பரீட்சை முடிந்ததும், சிறிய லொறியில் தனது நண்பர்களுடன் அமுனுகம சந்திக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு, வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு அந்நியன் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றான்.
எனினும், மோட்டார் சைக்கிள் வீட்டுக்குச் செல்லாம் வேறு வழியில் சென்றுள்ளது.
இதையடுத்து, தன்னை கடத்துவதற்கு குறித்த நபர் முயற்சிப்பதை சிறுமி அறிந்துள்ளார்.
“கத்தினால் கொன்றுவிடுவேன்” என மிரட்டிய நபர் காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்ற மோட்டார் சைக்கிள் சென்ற போது, ஞாயிற்றுக்கிழமை தகம் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவர்களைக் கண்டு காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
வீதியில் பயணித்த சிலர் சிறுமியை பார்த்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்று உண்மைகளை விசாரித்ததுடன் சிறுமியின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அம்பன்பொல பொலிஸ் நிலைய பரிசோதகர் சமன் பெரேராவின் பணிப்புரையின் பேரில் பெண் பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் இருந்த சி.சி.டி.வி காட்சிகளும் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.