தேங்காய் எண்ணெயைப் பெற்றுக்கொண்டு, செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான பணத்தை செல்லுபடியற்ற காசோலைகளின் ஊடாக வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஊவதென்ன சுமன தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி: THAMILAN