நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.