சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (05) நள்ளிரவு
அதற்கமைய, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, புதிய விலை 4,610 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, புதிய விலை 1,850 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 45 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள 2.3 கிலோ சிலிண்டரின் புதிய விலை 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.