முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்த காலப் பகுதியில் அவரது ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இன்று (16) சுதேவ ஹெட்டிஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, வெளிநாட்டு தூதுக் குழுவிற்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸ் கட்டளையை மீறி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.